2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரின் விசாரணைக்கு இடையூறு செய்த நபர் கைது

Menaka Mookandi   / 2011 நவம்பர் 07 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸார் விசாரணை செய்யும் போது குறுக்கிட்டு இடையூறு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று திங்கட்கிழமை 2 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது, தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். கொய்யாத் தோட்டம் பகுதியில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்கட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வெடித்து ஒருவரின் வீட்டின் சீற், கதவு மற்றும் யன்னல்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டவர்களின் ஒருவரின் உறவினர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது பொலிஸார் கடமையைச் செய்ய முடியதாவாறு இடையூறு செய்ததினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை யாழ்.நீதி மன்னறில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X