2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஹெரோயின் பாவனை, விற்பனையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நகரத்திலுள்ள இரு பாடசாலைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அதனை ஏனையோருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களில் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில்   விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றையடுத்து, யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களிலும் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியதாகவும் இதன்போதே மேற்படி நான்கு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டதாகவும்  யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இந்த நான்கு மாணவர்களும் பிரபல பாடசாலையில் கல்வி கற்பதுடன், இவர்களில் சிலர் ஆசிரியர்கள் மற்றும் அதிபரின் பிள்ளைகளாவர்களெனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மாணவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன், இந்த மாணவர்களில் ஒருவர் அதிகளவான போதைப்பொருள் பாவனையை மேற்கொண்டுள்ளதாகவும் மற்றும் ஏனைய மூன்று மாணவர்களும் சில நாட்களாகவே போதைப்பொருள் பாவனையை மேற்கொண்டுள்ளதாகவும் மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X