2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கல்வி வளர்ச்சியில் கிளிநொச்சி மாவட்டம் துரித வளர்ச்சிக் கண்டு வருகின்றது.'

Kogilavani   / 2011 நவம்பர் 11 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
'கல்வி நடவடிக்கையில் கிளிநொச்சி மாவட்டம் துரித வளர்ச்சிக் கண்டு வருகின்றது. பல்வேறுபட்ட வளப்பற்றாக் குறைகள் இருந்த போதும் அதன்வளர்ச்சி கட்டத்திற்காக உழைப்பவர்களை நாம் வரவேற்கின்றோம்' என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தின் 42வது ஆண்டு நிறைவு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்  தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அழிந்து போன இத்தேசத்தில் மக்கள் மீண்டும் தம்மை வளப்படுத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். அதில் கல்வி சார்ந்த செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதே எமது நோக்கமாக அமைகின்றது.

அத்தோடு பாடசாலைகளில் ஏற்பட்டிருந்த வளப்பற்றாக்குறைகளின் பெரும் பகுதி தீர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வளத்தினை இயன்றளவு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த சாதகமான நிலையினை பயன்படுத்தி மாணவர்கள் தமது இலக்கினை எட்ட முயற்சிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, இப்பாடசாலையில் பழைய மாணவர் சங்கத்தினரால் அமைக்கப்படவுள்ள 34 லட்சம் ரூபா செலவிலான சுற்று மதிலுக்கான அடிக்கல்லினையும்  நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் நாட்டி வைத்தார்.

இப்பாடசாலையின் அதிபர் குகானந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் முருகவேல், வடமாகான மேலதிக கல்விப் பணிப்பாளர் அரியரத்தினம், கிளிநொச்சி கோட்டக் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம், ஓய்வுபெற்ற அதிபர் சந்திராசா,  ஈபிடிபி கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் இரத்தினமணி, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் கடம்பசோதி  மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X