Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 12 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியின் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை காலக்கிரமத்தோடு செய்வதை அவதானிப்பதற்கும், உலக வங்கியின் நிதி செலவீனங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார்
யாழ். நூலகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை உலக வங்கி வேலைத்திட்ட ஒப்பந்தக்காரர்களுக்கும் செயலக அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
ஒருமாதத்திற்குள் உலக வங்கியின் நிதிச் செலவீனங்கள் தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் உள்ளூராட்சித் திணைக்களங்கள், யாழ்.மாநகர சபையின் உலக வங்கி வேலைத்திட்டங்கள் காலக்கிரமத்தோடு செய்து முடிக்கப்பட வேண்டும் எனவும் நிதி செலவீனங்கள் தொடர்பான அறிக்கைகள் தாயரித்து ஒரு மாதத்திற்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
44 minute ago
46 minute ago