2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.மாணவர்களுக்கு ஹெரோயின் விற்ற சந்தேக நபர்கள் இருவர் கைது

Kogilavani   / 2011 நவம்பர் 13 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப் பொருட்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தில் பேரில் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டடுள்ளதாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தே மேற்படி இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரனை நடைபெற்று வருவதாகவும் இவர்களை நாளை திங்கட்கிழமை யாழ்.நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படுவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதைப் பொருள் விற்பனை தொடர்பாக தொடர்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் இதனுடன் தொடர்புடைய முக்கிய நபர் கொழும்பில் தலை மறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பல் இருவாரத்தில் முழுமையாக கைது செய்யப்பட்டு விடுவார்கள் எனவும் யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • KD Sunday, 13 November 2011 07:32 PM

    சபாஷ் யாழ். பொலிஸாரே வாழ்த்துக்கள்.
    உங்கள் போதை ஓழிப்பு வேட்டை தொடரட்டும்…

    Reply : 0       0

    UMMPA Sunday, 13 November 2011 08:03 PM

    நமக்கு இருக்கும் ஒரே ஒரு துரும்பு இந்த படிப்பு மட்டும் தான். நமது சொந்தக் காலில் நிற்பதுக்கு உதவும் எனவே சற்று சிந்தித்து யாராவது இப்படியான நிகழ்வுகள் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்காமல் சமூகத்துக்காக இவர்களை காட்டிக்கொடுக்கவும் இல்லாவிட்டால் நாம் நமது உறவுகள் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இப்போதைய இலங்கை நமது உரிமை என்பவற்றுடன் ஒப்பிட்டு நாம் நம்மை கடைசி அழிவுப்பாதைக்கு சென்றுவிடாமல் பாதுகாப்போம் .!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X