2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அபிவிருத்தி, மீள்குடியேற்ற செயற்பாடுகளிலுள்ள குறைகள் தீர்க்கப்படும்: சந்திரகுமார் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 14 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகளும்  தாமதங்களும் நிரந்தரமில்லையென்பதுடன், அவை தீர்க்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஆழியவளை பகுதியில் மீள்குடியேறிய   40 கடற்றொழிலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் ஒவ்வொன்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கட்டுமரம், வளைகள் உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்கள் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அரசாங்கம் அடுத்த வருடம் கடற்றொழில் மற்றும் கரையோரப் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.  இது தவிர வடபகுதியில் பத்து பிரதேச செயலக பிரிவுகளை தெரிவுசெய்து  உட்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

அபிவிருத்திப் பணிகளையும் மக்களின் பிரச்சினைகளையும் குறுகிய காலத்தில் ஒரே தடவையில் தீர்க்கமுடியாது. அவை படிப்படியாக தீர்க்கப்படும்.  கடந்த காலங்களோடு தற்போதைய நிலைமையை ஒப்பிடுகையில் அபிவிருத்தியின் படிப்படியான முன்னேற்றங்கள் நன்கு புலப்படும்.   மக்களின் குறைகளை  மாத்திரம் கூறிக்கொண்டு அரசியல் இலாபம் தேடுகின்றவர்கள் நாம் அல்ல. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை தேடுகின்றவர்களே நாம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X