Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 16 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலி. தெற்கு கொத்தியாலடி மயானப் பகுதியில் இரவு வேளைகளில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் கோழியின் எச்சங்களை தொடர்ச்சியாக கொட்டி வந்த கோழி பண்ணையாளர்கள் இருவரை பிரதேசசபைத் தலைவர் தி.பிரகாஸ் சகிதம் சென்ற சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கையும் மெய்யுமாக பிடித்தனர்.
மேற்குறிப்பிட்ட பண்ணையாளர்கள் இருவரும் குறித்த பகுதியில் கோழிகளை உரித்த எச்சங்கள் மற்றும் கழிவு பொருட்களை பல மாதங்களாக கொட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச சபையினால் பொது மக்களுக்கு சுகாதரர சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் கழிவு பொருட்களை கொட்டுவதை தவிர்க்கும் படி பலமுறை அறிவுறுத்தல்கள் விடப்பட்டபோதிலும் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவது நிறுத்தப்படவில்லை.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு மக்கள் நடமாட்டம் குறைந்த நிலையில், கழிவு பொருட்கள் கொட்டுவதற்கு வந்த இரண்டு வாகனங்களையும் அதனுடைய உரிமையாளர்களையும் பிரதேச சபைத் தலைவர் தலைமையிலான குழுவினர் பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சபையின் கடந்த காலத்தில் கொட்டப்பட்ட கழிவு பொருட்களை அகற்றுவதற்கு ஏற்பட்ட செலவுகள் உட்பட தலா ஐம்பதாயிரம் ரூபா அறவிடப்பட்டது.
இக்கழிவுகளினால் கொத்தியாலடி மயானத்திற்க்கு இறுதிக் கிரியைகளை நடத்தச் செல்பவர்களும் சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியில் பயணங்களை செய்பவர்களும் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
31 minute ago