2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 18 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும் அவர்களின் காணி மற்றும் புனர்வாழ்வு தொடர்பாக கூடிய அக்கறை செலுத்துமாறும்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம்,  நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்தித்த  நீதியமைச்சர், முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும்  ஆராய்ந்தார்.

யாழ். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் மீள்குடியேற்றத்திற்கும் காணிகள் தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்து அவர்களின் புனர்வாழ்வில் அக்கறை செலுத்துமாறும் நீதியமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

யாழ். முஸ்லிம்களின் வீடுகளில் கிணறுகள் இருப்பதாகவும் அதனைப் பயன்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை அனுமதி வழங்கவில்லையெனவும் அவர் கூறினார். அவர்களின் பிரச்சினைகளில் முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் அவர் கோரினார். 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தங்களது சொந்த இடத்திற்கு வருகின்றார்கள். இந்த நிலையில், அவர்களின் தேவைகளையும் கவனத்தில் எடுக்குமாறு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • ULM Saturday, 19 November 2011 06:38 AM

    "தல" ண்டா தலதான்....
    நன்றி தலைவா...
    முஸ்லிம் அமைச்சர்களில் உங்களால் மட்டுமே முடியும், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க....

    நன்றி தலைவா...
    முஸ்லிம் அமைச்சர்களில் உங்களால் மட்டுமே முடியும், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க....')">Reply :
    0       0

    parundu Saturday, 19 November 2011 10:47 AM

    நான் ஒரு முறை சொன்னால், நூறு முறை சொன்ன மாதிரி.

    Reply : 0       0

    UMMPA Saturday, 19 November 2011 04:19 PM

    யார் யாரிடம் சொல்லுவினோம். நீங்கள் சொன்னால் நடந்துவிடும் என்று நீங்கள். உங்களுக்கு பெரியவரின் ஆசிர்வாதம் இருந்தால் ஓகே. இல்லாவிட்டால் கதைப்போம், பத்திரிகை எழுதும், நாலு மனிதன் பேசுவான். நீதியமைச்சர் அறிக்கைவிட்டுள்ளார். முன்னேற்றம் ஏற்படும். பத்திரிகை பக்கம்தான் நிரம்பும். ஆனால் நாங்கள் ?????

    Reply : 0       0

    mtmsiyath Saturday, 19 November 2011 04:42 PM

    மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியமர்தல் தொடர்பாகவும் அக்கறை காட்டுவீர்களா? அமைச்சர் அவர்களே!...........

    Reply : 0       0

    angaady Saturday, 19 November 2011 10:00 PM

    ஹக்கீம் சேர வழமையான அறிக்கை . இதைப்பற்றி யாரும் அளட்டிக்கொள்ளத்தேவயில்ல.......

    Reply : 0       0

    Thariq Niyas Saturday, 19 November 2011 11:22 PM

    இது அறிக்கை இல்லை கோரிக்கை...

    Reply : 0       0

    sanjith Sunday, 20 November 2011 02:33 AM

    matra amaicharhal arikkaividavum laayakkillamal irukangale, Mr.angaady.

    Reply : 0       0

    angaady Sunday, 20 November 2011 05:00 AM

    சஞ்சித்.. மற்ற அமைச்சர்கள் சொல்லாமல் செய்வார்கள். அதைத்தான் நாங்க சொன்னம். ஒரு cabinat அமைச்சர் இங்கிருந்து அங்குபோய் அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்...!

    Reply : 0       0

    senaiyuraan Sunday, 20 November 2011 02:59 PM

    இடம் மாறி பேச்சு நடக்குதா பேசவேண்டிய இடத்தை விட்டுபோட்டு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுவதா?? யாழ் முஸ்லிம்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டவர்கள் என்பதை உலகே அறியும் இவர்களின் மீள் அமர்வு சம்மந்தமாக ஏன் பெரிய மட்டங்களுடன் பேசி தீர்க்க முடியாதா தலைவா? உனது ஆளுமையை கண்டு மத்தவர்கள் மதி மயங்கட்டும் அறிக்கை மட்டும் இல்லை. செயலில் காட்டுவோம் என்பதை செய்து காட்டுவார் எம் தலைவர் சற்று பொறுங்கள்.

    Reply : 0       0

    fazal Sunday, 20 November 2011 08:32 PM

    அங்காடி, முஸ்லிம் முதல் அமைச்சர் கிடைக்காவிட்டால் பதவி துறப்போம் என்று சவால் விட்ட கதையை மறந்திட்டிங்களா? சொல்லாமல் செய்வார்களாம் ... முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்காதிங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X