Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 18 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாநாட்டில் 'சீட்டு' பணமுதலீடுகள் தொடர்பாக யாழ்.மக்கள் பலர் ஏமாறியுள்ளனர் என யாழ். மாவட்ட செயலளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான முதலீட்டுக்கான வெகுமானம் பற்றிய முதலீட்டாளர் விழிப்புணர்வு தொடர்பாக கலந்தாய்வரங்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தமது முதலீடுகளை நம்பிக்கையான நிறுவனத்தில் முதலீடு செய்து தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டும்.
யாழ்.மக்கள் 'சீட்டு' தொடர்பான விழிப்புணர்வு இல்லாது முதலீடுகளைச் செய்து பல மில்லியன் ரூபாய்களை இழக்கின்றனர். நம்பிக்கையில்லாத நிதி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் நிறைய இறக்குமதியாகியுள்ளன. இவைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்
யாழ்.மாவட்டத்தின் தனிமனிதனுடைய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முதலீடுகள் முக்கியமானவை. எனவே முதலீடுகளை நம்பிக்கையான நிதி நிறுவனங்களோடு வைத்திருக்க வேண்டும் என்றார்.
இந்த முதலீடுகள் தொடர்பான கலந்தாய்வரங்கில் இலங்கை வங்கியின் வடமாகாண சிரேஷ்ட முகாமையாளர் பாலகிருஷ்ணன் சிவதீபன், இலங்கை வங்கியின் வடமாகாண முகாமையாளர் கௌரிசங்கர், இலங்கை மத்திய வங்கியின் கடன் திட்டமிடல் முகாமையாளர் ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
43 minute ago