2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நியாயமான அரசியல் தீர்வுக்காகவே த.தே.கூட்டமைப்புடன் அரசு பேசுகிறது: யாழில் பிரதமர்

Super User   / 2011 நவம்பர் 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது என பிரதமர் தி.மு.ஜயரட்ன யாழ்பாணத்தில் தெரிவித்துள்ளார்

சமய நிறுவனங்களை மேம்படுத்தல் மற்றும் ஆன்மீக வளர்ச்சி தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

சகல இனங்களும் இந்த நாட்டில் 30 வருட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உலகமே இன்று உணர்ந்துள்ளது. பயங்கரவாதம் மீண்டும் வரக்கூடாது என நினைக்கும் மக்களும் இங்கு இருக்கிறார்கள்.

அதேவேளை மீண்டும் பயங்கரவாதம் உருவாக வேண்டும் என எண்ணுபவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாட்டில் வாழும் நாங்கள் அழிவுகளற்ற, அமைதியான அச்சுறுத்தல்கள் இல்லாத வாழ்வையே விரும்புகிறோம். அழிவுகள் தந்த துன்பங்களில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறோம்

மதம். கலாச்சாரத்தினால் நாங்கள் வேறுபட்டவர்களாக இருந்தாலும் எங்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றாக தான் இருக்கும். இனம் என்பது நிலையானது அல்ல, மனிதவரக்கமே நிலையானது.

சுயநல அரசியல் காரணமாக நாங்கள் உலக நாடுகளை விட பின்னுக்கு நிற்கின்றோம். எமது இனப்பிரச்சினைகளை சமாதானமான முறையில் பேசி தீர்ப்பதற்கு சுயநல அரசியலின் காரணமாக  முடியாத நிலையில் உள்ளது.

இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு மூவினங்களும் ஒன்றினைந்தால் தான் தீர்க்க முடியும். எந்தவொரு இனத்திற்கும் நான் விரோதமாக நடந்தது கிடையாது. நாங்கள் அனைவரும் சகோதர்களாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும். தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளில் சிறிதளவு ஏதும் குறையிருக்க நான் விடமாட்டேன் என்றார்.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • sanjith Saturday, 19 November 2011 09:35 PM

    rajapaksha kudumpathitku ethu niyayamana theervaha padumo theriyathu.

    Reply : 0       0

    Pottuvilan Sunday, 20 November 2011 01:59 AM

    இந்த கருத்தை கொழும்பில் சொல்வீர்களா ஐயா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X