2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு காலவதியான பொருட்கள் விநியோகம் - மக்கள் அதிர்ச்சி

Kogilavani   / 2011 நவம்பர் 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் நாவலடி, பூம்புகார் மற்றும் அரியாலையின் கிழக்கு பகுதிகளில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களால் கடந்த 15 ஆம் திகதி செவ்வாய்கிழமை வழங்கப்பட்ட அத்தியவசிய பொருட்கள் பாவனைக்கு உதவாத காலவதியான பொருட்கள் என அப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர்

மீளக்குடியேறிய மக்களில் 80 குடும்பங்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சவர்காரம், சலவைதூள், பற்பசை, ஆரோக்கிய துவாய்கள், ஷம்போ போன்ற அத்தியாவசியப் பொருட்களே காலாவதியான நிலையில் மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் நாவலடி கிராம சேவையாளரிடம் கேட்ட போது, தமக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனவும் அவர்களே நேரில் சென்று கொடுத்துள்ளதாகவும் தான் பதிவுகளை மாத்திரம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் வினாவிய போது,

மீளக்குடியேறிய மக்களுக்கு பாவனைக்கு உதவாத மற்றும் காலவதியான பொருட்கள் விநியோகித்தமை தொடர்பாக உரிய தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X