2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகள் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டுப் பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகள் தற்போது அதிகரித்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி அமுலில் உள்ளநிலையில் யாழின் பல பிரதேசங்களில் மாணவர்கள் இடைவிலகளும் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. இதனைத் தவிர்க்கும் முகமாக பாடசாலையில் விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ். கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வறுமை, பெற்றோர் இல்லாத பிள்ளைகள் போன்ற காரணங்களே இந்த இடைவிலகலுக்கு காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் அதிகமாக கிராமப்புறப் பகுதிகளிலுள்ள மாணவர்களே இவ்வாறு இடைவிலகிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் சாதாரணத்தரப் பரீட்சைக்கு முன்னரும் சில பிரதேசங்களில் மாணவர்கள் இடைவிலகிச் செல்கின்றனர். இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதாக யாழ்.கல்வித்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான பிள்ளைகளைக் காணும்பட்சத்தில் அவர்களை பாடசாலையுடன் இணைத்து கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் உதவ வேண்டும் என யாழ். கல்வித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X