Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 27 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி, சுபுன் டயஸ்)
யாழ். பல்கலைக்கழக வளாக வெளிவீதிகளைச் சுற்றி பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறங்களில் தமிழீழ மாவீரர்நாள் நினைவுகூரப்படலாமென்ற சந்தேகத்தில் இவ்விதமான பாதுகாப்புக் கடமையிலும் கண்காணிப்பிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த மாவீரர்நாள் தொடர்பான பிரசுரங்கள் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடந்த 24ஆம் திகதி கிழித்தெறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிலர் முயற்சிப்பதாக எமக்கு தகவல் கிடைத்ததையடுத்தது. அதை தடுப்பதற்கு நாம் பொலிஸ் குழுவொன்றை அனுப்பியுள்ளோம்' என பாதுகாப்பு படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
'யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வழக்கமான சாதாரண ஒரு நாளாக இருக்கும். நிலைமையை நாம் அவதானித்து வருகிறோம். இதுவரை யாழ் குடாநாட்டில் கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்' என அவர் கூறினார்.
Kethis Sunday, 27 November 2011 09:46 PM
புலி இல்லாவிட்டாலும் கிலி குறையவில்லை
Reply : 0 0
neethan Sunday, 27 November 2011 11:07 PM
கட்டளை தளபதியே மக்களின் உரிமைகளும், உணர்வுகளும் மதிக்கபடாதவரை சிப்பாய்களும், வீரர்களும் ஓய்வு கொள்ளமுடியாது. மக்களின் மனதினை வெல்லும் பணியில் ஈடுபடுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
17 May 2025