Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 28 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின் மரணம் அடைந்ததாகக கூறப்பட்ட இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
புன்னாலைக் கட்டுவன் தெற்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் புன்னாலைக் கட்டுவன் தெற்கைச் சேர்ந்த மன நோயாளி என கூறப்படும் சுமனன் (வயது 28) என்பவர் கடந்த திங்கட்கிழமை 21ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியிலுள்ள குளத்தில் சடலமாக காணப்பட்டதாகக் கூறி கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சடலத்தை கிளிநொச்சி பதில் நீதிபதி விஜயலட்சுமியினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனையைத் தொடர்ந்து சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்;கொள்ளும் படி அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்க்கொள்ளப்படும் என எதிர்பார்த்து உறவினர்கள் இருந்தனர்.
ஆனால் சடலம் அனுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபருடன் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் நான்கு பேரும் கடந்த சனிக்கிழமை இரவு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
17 May 2025