2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீளக்குடியேறிய மக்களில் வாழ்வியலை முன்னேற்ற புலம்பெயர் தமிழர் கைகொடுக்க வேண்டும்: இமெல்டா

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிபுரிய வேண்டும் எனவும் தாம் சார்ந்த சமூகத்தின் நலனில் புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் கைகொடுக்க வேண்டும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டாலும் அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யமுடியாத நிலையிலேயே இருக்கிறது. அவர்களின் தேவைகள் 10 வீதமும் முழுமையடையவில்லை.

கல்வி, சுகாதாரம், மின்சாரம், போசாக்கு என்பவற்றை இன்னமும் பூர்த்தி செய்ய முடியவில்லை. இருந்தும் மக்களைக் குடியேற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் சொந்த இடங்கில் மீளக்குடியேறாது விட்டால் அவர்களின் காணிகள் பறிபோகும் அபாய சூழல் ஏற்படும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீளக்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை ஒரளவுக்காவது முன்னேற்றுவது தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை இடம் பெற்று வருகிறதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Tuesday, 06 December 2011 07:57 PM

    நல்ல கருத்தையே சொன்னீர்கள் அரச அதிபரே, புலம் பெயர்ந்து வாழும் எம்மவரின் ஒத்துழைப்பு எவ்வாறு அமையுமோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .