2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மண்டைதீவு வயல்வெளிகளைச் சுற்றி முட்கம்பி வேலி அடைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், மண்டைதீவு பிரதேசத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்வெளிகளைச் சுற்றி முட்கம்பி வேலி அடைப்பதற்காக மண்டைதீவு விவசாய சம்மேளனத்திற்கு 130 றோல் முட்கம்பி நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மண்டைதீவு பிரதேசத்தில் சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதைக்கப்பட்ட நெல்லுகள் கட்டாக்காலி மாடுகளால் சேதமாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே வயல்வெளிகளைச் சுற்றி முட்கம்பி வேலி அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு விவசாய சம்மேளனத்திடம் முட்கம்பியை வழங்கிவைத்து உரையாற்றிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்,

'மண்டைதீவு பிரதேச மக்களின் பிரச்சினைகள் எனக்கு நன்றாகவே தெரியும். வேலணை பிரதேச செயலரும் இது தொடர்பில் என்னுடன் பல தடவைகள் உரையாடியுள்ளார்.
உங்களின் பிரதேசத்தில் கடற்படையால் விடுவிக்கப்படாத பகுதிகளை வெகுவிரைவில் உங்களிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்' என்றார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட திட்டப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், வேலணை பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .