2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பதிய அனுமதி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளவர்களில் எவராவது மீளவும் தம்மை வாக்காளராக பதிவு செய்யாதிருந்தால் தேர்தல் திணைக்களத்திற்கு அறியத்தருமாறு யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்கான  வாக்காளர் இடாப்பிலிருந்து 41,715 பேர் நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில் எவராவது தம்மை மீளவும்  வாக்காளராக பதிவு செய்யத்  தவறியிருந்தால் தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் அந்தந்த கிராம அலுவலகர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டால் இலகுவாகவிருக்கும். அவ்வாறு கிராம அலுவலகர்கள் உறுதிப்படுத்த மறுக்கும் பட்சத்தில் அக்கடிதத்தை தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .