2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தனிமையில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி அறுத்த சந்தேக நபர்கள் இருவர் கைது

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். அரியாலை, புங்கங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் தனிமையில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் தங்கச் சங்கிலி அறுத்தெடுத்த சந்தேக நபர் இருவர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனிமையில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த ஜந்து பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்து அறுத்துக் கொண்டு செல்லும் போது குறித்த பெண் அவலக்குரல் எழுப்பிய போது வீதி போக்குவரத்து பொலிஸாரிடம் இத்திருடர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.

தங்கச் சங்கிலி அறுத்த இரு நபர்களையும் யாழ். பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் நாளை நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .