Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ந.ஜெயக்குமார் எழுதிய 'நோய்நாடி நோய்முதல் நாடி' என்னும் புற்று நோய் விழிப்புணர்வு நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான ஆலோசகரும் யாழ்ப்பாணம் பல்கலைக்ழக மருத்துவ பிட சமுதாயத்துறை முன்னாள் தலைவருமான வைத்திய கலாநிதி என்.சிவராசா இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணமும் சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வித் திணைக்கள கல்விப் பணிப்பாளர் பா.விக்கினேஸ்வரனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆசியுரையை நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்குவதுடன் வாழ்த்துரையை வைத்திய கலாநிதி சு.சிவகணேஸும் வழங்கவுள்ளார்கள்.
கலாநிதி சி.ஜமுனாநந்தாவும் மதிப்பீட்டுரையை சுகாதார அமைச்சின் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதனும் நிகழ்த்தவுள்ளார்கள். நூலினை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டு வைக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago