2025 மே 17, சனிக்கிழமை

மின்சாரசபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மூவர் வழக்குத்தாக்கல்

Kogilavani   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மின்பாவனையாளர்கள் மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக யாழ்.மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் எஸ். ரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்

அண்மையில் யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக  வர்த்தகர்கள் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் அவர்களுக்கான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதவான் ஆ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மின்பாவனையில் ஈடுபட்ட 156 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

இந்த மின்பாவனையாளர்களில் மூவர் தாம் கைது செய்யப்பட்டது முறையற்றது எனவும் தங்களுக்கு எதிரான குற்றம் சோடிக்கப்பட்டது எனக்கூறி இந்த வழக்கை இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளதாக பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .