2025 மே 17, சனிக்கிழமை

யாழ். மாநகரசபை வரவு - செலவுத்திட்டத்தை எதிர்ப்போம்: யாழ். மாநகரசபை எதிரணி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'யாழ். நகரின் அபிவிருத்திக்கு மக்களின் பங்களிப்பும் உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் பெறப்படாமல் முன்மொழிவுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படாமல் வரவு -  செலவுத்திட்டத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்' என யாழ். மாநகரசபையின் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாநகரசபையின் 2012ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு - செலவுத்திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை யாழ். மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிதிச்செலவினங்கள் தொடர்பாக நிதிக்குழு கூட்டப்பட்டு வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்பட  வேண்டுமெனவும் உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அவர்களின் பங்களிப்புடன் நடைபெறவேண்டுமெனவும் இதன்போது  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .