Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகரொருவரின் மகன் காணாமல் போனதாக இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவனான பாக்கியராஜா தனுஷன் (வயது 18) என்ற மாணவனே நேற்றிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் இது தொடர்பில் குறித்த மாணவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ். நகரப் பகுதியிலுள்ள கடையிலிருந்து வீடு செல்லும்போது இவர் காணாமல் போயுள்ளதாகவும் இவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
21 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
27 minute ago