2025 மே 17, சனிக்கிழமை

ஆலயதேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்தவர் என சந்தேகிக்கப்பட்ட நபர் மூன்று வருடங்களின் பின் விட

Kogilavani   / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.அளவெட்டி மீனாட்சி அம்மன் ஆலயத் தேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்தார் என சந்தேகத்தில் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ்.அளவெட்டி மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மேல் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி யாழ்.அளவெட்டி மீனாட்சி அம்மன் ஆலயதேர் முட்டிக்குள் ஆயுதங்களும் இராணுவச் சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து   குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்

இவர் மீது குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்தது. இவருக்கு எதிராக இரு இராணுவத்தினரும்  ஒரு பொலிஸ் உத்தியோகஸ்த்தரும்  சாட்சியளித்தனர்.

இந்த குறுக்கு விசாரணையில் மூன்று சாட்சிகளுக்குமிடையில் பல முரண்பாடுகள் தென்பட்டதை அடுத்து இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாத நிலையில் வழக்கில் இருந்து பூரணமாக அளவெட்டி மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். பரமராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

இவர் சார்பாக பிரபல சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் ஆஜராகியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .