Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் உபதலைவரும் அதன் பேச்சாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'நாம் ஏற்கனவே கடந்த ஒருவருடத்திற்கு மேலாக கூறி வந்தது போன்று நடந்தவற்றை மூடி மறைத்து முற்றாக புலிகளையும் தமிழ் தரப்புகளையும் குற்றஞ்சாட்டுவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கை வெளி வந்துள்ளது. இந்நிலையில் சர்வதேசம் இனியும் பொறுத்திராது பக்கசார்பற்ற விசாரணையை நடத்தவேண்டும்.
கடந்த ஒருவருடத்தினுள் எவ்வளவோ செய்திருக்க முடியும். இனிமேலும் பொறுத்திருக்க முடியாது. அது வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் ஒர் உத்தியாகவே அமைந்துள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கையினை நிராகரிக்க வேண்டுமென வேண்டுகோளை முன்வைக்கிறோம். அவர்கள் இவ்விடயத்தினில் விரைந்து தமது கட்சியின் பொது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.
சர்வதேசம் இனப்படுகொலை தொடர்பிலான விசாரஇணையை பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அது போர் நடந்த இறுதி மூன்று வருடங்களாக மட்டும் இருக்கக்கூடாது. பிரிட்டிஸார் இலங்கையிலிருந்து விலகிய காலம் முதல் தமிழ் மக்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றம் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago