Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் பரவல்அதிகரித்துச் செல்வதாகவும் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு போதுமாக இல்லை எனவும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் மாரி காலத்தில் டெங்குநோயின் தாக்கம் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்ற காரணத்தால் சுகாதார சேவைத் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து கள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றன. இவற்றில் பொதுமக்களின் ஒத்துழைப்பு திருப்பிகரமானமாக இல்லை.
பொதுமக்கள் டெங்கு நோய் பற்றி ஏதோதானோ என இருப்பதாகவும் அதன் தாக்கம் குறித்து அக்கறையற்றவர்களாக இருப்பதன் காரணமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் எனற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டங்கள் பிரதேச ரீதியாக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago