2025 மே 17, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கி வெடித்ததில் இரண்டு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்: இருவர் படுகாய

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 26 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கல்வியங்காட்டுப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மாலை எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது இரு மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்துச் சிதறின. இதனால் இரண்டு பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ். பருத்தித்துறை வீதி கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அதேசமயம் எரிபொருள் நிரப்புவதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பெற்றோல் தாங்கி வெடித்துச் சிதறியது. இதில் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பராகியது.
 

இவ்விபத்தில் கைதடி நாவற்குழியைச் சேர்ந்த 62 வயதுடைய கந்தையா மனோகரன், நெல்லியடியைச் சேர்ந்த 60 வயதுடைய கந்தையா பழனிமலை, என்ற இருவருமே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .