Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 04 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலைமகளை ஆராய்வதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் மற்றும் அவரது குழவினர் இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு விசேட வானூர்தியினூடாக வந்து இறங்கிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் குழுவினரை யாழ்.மாவட்ட செயலளர் திருமதி இமெல்டா சுகுமார் வரவேற்றுள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் அவரது குழுவினருடன் வடமாகாண அளுநர் ஜீ.ஏ. சந்திர ஸ்ரீ மற்றும் யாழ்.மாவட்ட செயலளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இவர்களது சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்கள் ஆளுநர் அலுவலக வாசஸ் தளத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago