Menaka Mookandi / 2012 ஜனவரி 17 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துச் செல்வதினால் இடப் பற்றகாக்குறை ஏற்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
யாழில் சிறு சிறு குற்றங்களுக்காக பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் 240 பேர் தடுத்துவைக்கப்பட வேண்டிய இடத்தில் 280 முதல் 310 கைதிகள் தடுத்துவைக்கப்படுவதாகவும் இதனால் இடநெருக்கடியை கைதிகள் எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றத்திற்கான தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் பலர் சிறைத் தண்டணை அனுபவிப்பதாகவும் இந்த நிலையினால் யாழ். சிறைச்சாலையில் தடுக்கப்படும் கைதிகளில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
46 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
4 hours ago