Kogilavani / 2012 ஜனவரி 21 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ், கவிசுகி)
அமெரிக்கத் தூதரக அரசியல் விவகார துணை செயலர் அடங்கிய தூதரக குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை அன்று யாழ் ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையை யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.
அவர்கள் போரின் பின்னரான நிலைமைகள், மக்களின் மீள்குடியேற்றம் குறித்து யாழ். ஆயரிடம் கேட்டறிந்தனர்.
யாழ். ஆயர் அவர்களுடன் உரையாடும்போது 'மக்கள் மீளக்குடியமர்வதற்கு முதலாவது தேவையாக இருப்பது வீட்டு வசதியாகும். திடீரென வீடுகளை அமைக்க முடியாது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைத் தருவதாக வாக்களித்தபோதும் 5 ஆயிரம் வீடுகளையே கட்டி முடித்துள்ளது.
இம்மக்களின் வாழ்வாதார தேவைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும். அரசு இதற்கான உதவிகளை செய்துள்ளது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த உதவிகளை செய்து வருகின்றன.
பாதைகள் சீர்செய்யப்பட வேண்டும். இலகுவான போக்குவரத்துக்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் மருத்துவ சேவை விரிவாக்கப்பட வேண்டும்' என விளக்கினார்.
போரின் பின்னர் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் இவை, பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்குமா, இதனை வரவேற்கிறீர்களா? என்று அவர்கள் கேட்டனர்.
யாழ் ஆயர் பதிலளிக்கையில், 'இது பற்றி இன்னும் மக்களுக்கு முழுமையாக தெரியாது. தமிழில் இவ்வறிக்கை மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஒருவர் கையிலும் புத்தகம் இல்லை. இதில் இருக்கும் குறைபாடுகள் பற்றி பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
இது மக்களுடைய எல்லா அபிலாஷைகளையும் நிறைவேற்றக்கூடியதாக இல்லை என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது. அப்போது யுத்தம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான பதிலை அரசாங்கம் தர வேண்டும். அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு தரப்படவேண்டும்' என்று தெரிவித்தார்.
9 minute ago
15 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
24 minute ago
34 minute ago