Menaka Mookandi / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கத் தாலிக் கொடி ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டி அதை தங்க விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த ஏழு பேரை யாழ்.பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
தங்கத் தாலியை களவு எடுத்து விற்பனை செய்த சந்தேக நபர்கள் ஏழுபேரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஏழுபேரும் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள். இவர்கள் எங்கு தங்கத் தாலியை திருடினார்கள் என விசாரணை செய்து அது குறித்து நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு யாழ்.பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago