Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வன்னிப் பகுதியில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான கடந்த 2009.05.15 இல் இராமாவில் முகாமிலிருந்து காணாமல் போன தனது மகன்மார்கள் இருவர் பத்திரிகை புகைப்படம் ஒன்றில் இருப்பதாகவும் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறும் இலங்கை மனித உரிமைகள் யாழ். பிராந்திய அலுவலகத்தில் தாயொருவர் இன்று புதன்கிழமை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். திருநெல்வேலி பால்பண்ணை வீதியைச் சேர்ந்த ஜெயவீரசிங்கம் செல்வராணி என்ற தாயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
ஜெயவீரசிங்கம் கஜந்தன், ஜெயவீரசிங்கம் இராயந்தன் ஆகிய இரு சகோதரர்களே இராமாவில் முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் எனவும் இவர்கள் இருவரும் காணாமல் போனமை தொடர்பாக ஜ.சி.ஆர்.சி. யிலும் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
உள்ளூர் பத்திரிகை இரண்டில் கட்டுரைப் பகுதியில் வெளியான படத்தில் தனது மகன்மார்கள் இருப்பதாகவும் எனவே அவர்கள் இலங்கையின் எந்த மூலையிலாவது இருக்கக் கூடும் எனவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தருமாறும் அத்தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
pasha Wednesday, 22 February 2012 09:33 PM
தேடி கொடுங்கள். புண்ணியம் கிடைக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago