2025 மே 17, சனிக்கிழமை

பாடசாலை மாணவியை காணவில்லை; கோப்பாய் பொலிஸில் முறைபாடு

Menaka Mookandi   / 2012 மார்ச் 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பெற்றோர் முறையிட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் அமைந்துள்ள மகளிர் கல்லூரியொன்றில் தரம் 8இல் கல்வி பயிலும் மாணவியான சுதன் திஸ்ஷா (வயது 14) என்ற மாணவியே காணாமல் போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது.

குறித்த மாணவி நேற்று வியாழக்கிழமை காலை பாடசாலைக்கு சென்றார் எனவும் இன்று வரை அவர் வீட்டுக்கு திரும்பவில்லை எனவும் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தேடியும் இவர் கிடைக்கவில்லை எனவும் இவரைக் கண்டு பிடித்து தருமாறு பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலை மாணவி காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய நிலையத்திலும் இன்று வியாழக்கிழமை முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .