2025 மே 17, சனிக்கிழமை

அரச காணிகளின் பங்கீடு தொடர்பில் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதிக முறைப்பாடுகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சியில் அரசாங்க காணிகளின் பங்கீடுகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் கிளிநொச்சியில் வாழும் மக்களின் உறவினர்களுக்கு இடையில் அதிகளவில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ரி.கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், அரசாங்க  காணிகளைப் பங்கீடு செய்கின்றபோது பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருதி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில்  அரசாங்க  நிர்வாகத்தில் ஏற்படும் சேவைகள் தொடர்பாகவும் பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பாகவும்  முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .