2025 மே 17, சனிக்கிழமை

கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு பிடியாணை

Super User   / 2012 மார்ச் 14 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐயூப் கானுக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பாக முக்கிய சாட்சியான இவர், ஆறு தடவைகள் நீதிமன்றுக்கு சமுகமளிக்காமையினாலேயே பகிரங்க  பிடியாணையை யாழ். மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த ஆறு தடவைகள் யாழ். மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டும் மன்றுக்கு ஆஜராகாமலும் அதற்கான காரணம் குறிப்பிடாமையினாலுமே நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .