2025 மே 17, சனிக்கிழமை

நெடுந்தீவு மாணவி கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 மார்ச் 16 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நெடுந்தீவில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபரை இம்மாதம் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

31 வயதான கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் இச்சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது இவர் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகி இருக்கவில்லை.

பாலியல் வல்லுறவுக்குப் பின் கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் தமது தமது வாய்மூல வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். இதேவேளை நீதிபதியின் வேண்டு கோளுக்கு இணங்க ஊர்காவற்றுரை பொலிஸ் தடவையியல் நிபுணர்கள் தங்கள் வாக்குமூலத்தை நீதிமன்றில் சமர்பித்தனர்.

பாலியல் மற்றும் கொலைச் சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகாத காரணத்தால் சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆர்.வி.மகேந்திரராஜா உத்தரவிட்டார்.

இதேவேளை ஊர்காவற்துறை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் சுற்றி பெண்கள் அமைப்புக்கள் அமைதியான முறையில் இக்கொலைக்கு எதிர்வை வெளிப்படுத்தியுள்ளதாக ஊர்காவற்துறை நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .