2025 மே 17, சனிக்கிழமை

யாழில் அனுமதிப்பத்திரமின்றி பல்வைத்திய நிலையங்கள் நடத்திய ஏழு பேர் கைது

Super User   / 2012 மார்ச் 16 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உரிய அனுமதிப்பத்திரம் இன்றி பல் வைத்திய நிலையங்கள் நடத்திய ஏழு பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்

குறித்த பல் வைத்திய நிலையம் நடத்திய ஏழு பேருமே எந்தவித ஆவணங்களும் இன்றி 30 வருடங்களுக்கு மேலாக இந்த நிலையத்தை நடத்தி வந்துள்ளனர் என யாழ். பொலிஸார் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா நீதிமன்றில் அறிக்கை சமர்பித்தார்.

மேற்படி  பல்வைத்திய நிலைய உரிமையாளர்களான ஏழு பேர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மு.றெமிடியஸ்  இவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து ஏழு பேரையும் தலா 30,000 ஆள்பிணையில் செல்வதற்கு யாழ்.நீதிமன்ற நிதிவான் மா.கணேசராசா அனுமதித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .