2025 மே 17, சனிக்கிழமை

போலியான ஆவணம் தயாரித்து நீதிமன்றத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் யாழில் கைது

Super User   / 2012 மார்ச் 16 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

வழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்ட நபரை பிணையில் விடுவிப்பதற்காக போலியான முறையில் ஆவணங்களைத் தயாரித்து நீதிமன்றத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்.நாவந்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் தனது நண்பரை பிணையில் விடுவிப்பதற்காக கிராமசேவையாளரின் இறப்பர் முத்திரை மற்றும் கடிதம், நீதிமன்ற பதிவாளரின் இலச்சினை ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்கு முயற்சித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .