2025 மே 17, சனிக்கிழமை

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமுடியும்: யாழ

Super User   / 2012 மார்ச் 17 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணமுடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உட்பட ஜ.தே.கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்  விஜயம் மேற்கொண்டுள்ளனர். அங்கு  மக்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்விதம் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

'யாழ்ப்பாண மக்கள் இன்னமும் நிம்மதியாக வாழவில்லை அவர்கள் வெள்ளைவான் பீதியுடன்தான் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு விடுதலை கிடைத்தும் வீதியில் இறங்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள்' என ரணில் கூறினார்.

இன்று சனிக்கிழமை காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களுக்கு  பயணம் மேற்கொண்ட ரணில் பல இடங்களில் மக்களை சந்தித்துப் பேசினார்.

பல்வேறு இடங்களிலும் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை பின்வருமாறு:

சாவகச்சேரியில் ...

'மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த மக்களுக்கு ஒருபோதும் அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுக்க முடியாது. அரசிற்கு எதிராக வடக்கு தெற்கு மக்கள் ஒன்றினைந்து போராட வேண்டிய காலம் நெருங்கி விட்டது. அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் அனைவரும் ஒன்றுபடுங்கள்.

கற்றுக் கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்தி அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய வேண்டும். தேர்தல் ஒன்றைக் கொண்டு வந்து அரசை மாற்ற வேண்டும் இம்முறை மே தினத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.'

கச்சாயில் ...

'நாட்டில் விலைவாசி ஏறிக் கொண்டு செல்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்வையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும். எங்களுக்கான தீர்வை எட்டுவதற்கு காலம் கனிந்துள்ளது.'

நீர்வேலியில் ...

'வடபகுதி மக்கள் யுத்ததின் போது பட்ட கஷ்டங்களை இப்போது முழு உலகமுமே பார்த்து கதைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த மக்கள் மிகவும் துன்பப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றது.

பெண்கள் குடும்பத்தை தாங்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். நான் மிகவும் கவலையடைகின்றேன் இந்த அரசாங்கம் பெண்களை கவனிப்பதில்லை. யாழ்ப்பாணத்தை சுற்றிப் பார்க்கும் போது ஒரு உண்மை மட்டும் தெரிகிறது. இங்கு அநீதி தலைவிரித்தாடுகிறது.

நெடுந்தீவில் நடைபெற்ற கொடூரம் 12 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொடுரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார். இது சம்பந்தமான பொலிஸ் விசாரணைகள் துரிதப்படத்தப்படவில்லை.


யாழ்ப்பணத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பெண்கள் வந்து இம்சைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். கற்துக் கொண்ட பாடங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதாக கூறும் அரசாங்கம், அதை நடைமுறைப்படுத்த இன்னமும் முயற்சிக்க வில்லை.

எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிறைந்து மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். கற்றுக் கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மக்களுக்கு வாழ்வதற்கான நிவாரணம் வழங்க வேண்டும்., தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றை அரசு செய்யாவிட்டால் மக்கள் சக்தி போராட்டம் நாடு முழுவதும் வெடிக்கும்.'

தெல்லிப்பளை வித்தகபுரத்தில்...

ராஜபக்ஷ அரசாங்கம் வலிகாமத்தை இல்லாமல் செய்யப்பார்க்கிறது. இந்த மக்களுக்கு வீதி அபிவிருத்தி இல்லை, மின்சாரவசதி, வைத்திய சேவை, வீடுகள் மலசலகூட வசதிகள் எதுவுமில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

அரசு இனவாதத்தை தூண்டி வடக்கை அழிக்க நிலைக்கிறது. வடக்கு தெற்கு மக்கள் பேதமற்ற முறையில் இணைந்து செயற்பட்டு இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


அராலி தெற்கில்...

2004 தீர்வுத்திட்டத்தை புலிகள் நிராகரித்தார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் வேலை செய்கின்றவர்கள். நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தால் தீர்வுத்திட்டத்தை எட்டமுடியும்

வாழ்கைச் செலவு எல்லோரையும் பாதிக்கிறது. அதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்

சுன்னாகத்தில்...

யுத்ததிற்கு பின்பு அரசியல் தீர்வு வழங்கப்படாததால் இந்த மக்கள் பலகஷ்டங்களை எதிர்நோக்குவதை நாம் கண்ணுடாக காண்கின்றேன்.

அரசு இனவாதத்துடன் வடக்கு தெற்கைப் பிரித்து வைத்துள்ளது. மக்களாகிய நீங்கள் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையே பலம். இந்தப் பலத்தை மே தினத்தில் அரசுக்கு நாம் வெளிப்படுத்திக் காட்டுவோம்.

 மானிப்பாயில்..

'எல்லாவற்றையும் இழந்த மக்களின் வேதனையை நான் நன்கு அறிகின்றேன். உங்களிடம் சேகரிக்கப்பட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளேன்.'






You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Sunday, 18 March 2012 05:11 AM

    ஓ.. வாங்க உக்கட கதைய நம்பி உங்களுக்கு வாக்களிக்கம். முதல்ல நீங்க பொட்டிய எடுத்திட்டு வெளியாகுங்க கடு;சிய விட்டு அப்புறம் ஆட்சி மாற்றத்த பத்தி மக்கள் சிந்திப்பாங்க. நீங்க இருக்கும் வரைக்கும் ஆட்சி மாற்றத்த மக்கள் சிந்திக்கவே மாட்டாங்க.

    Reply : 0       0

    meenavan Sunday, 18 March 2012 05:47 AM

    பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள், உங்கள் தலைமைத்துவம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது.

    Reply : 0       0

    Abdur Rahman Abdullah Sunday, 18 March 2012 09:04 AM

    ஆட தெரியாதவருக்கு மேடை சரி இல்லையாம். இவருக்கு ஆடவும் தெரியாது ஆட்சி அமைக்கவும் தெரியவில்லை. அரசியல் சாணக்கியமும் புரியவில்லை. மேடையில் இருந்துகொண்டு கேக் தெனவாஇ ரத்தரங் தெனவாஇ மால தெனவாஇ என்று பேசினால் குழந்தைக்கு நிலவை காட்டி நிலவுக்கு போவோம் பால் சோறு உன்னு என்பதை போல... தலைவன் என்று சொன்னால் தலை நிமிர்ந்து பேச வேண்டும் மக்கள் தலை நிமிர்ந்து கேக்க வேண்டும் .யானையை காட்டில் வைத்து கொண்டு வீட்டில் இருக்கும் வெற்றிலையை காட்டுக்கு அனுப்புவோம் என்று பேசும் இவருடைய பழங் கதை. மதினாவில் இருந்து அப்துல்லாஹ்.

    Reply : 0       0

    ஜெமீல் ஓட்டமாவடி Sunday, 18 March 2012 02:44 PM

    அதோடு சோ்த்து உங்களது பிரச்சினைக்கும் ஒரு தீா்வு கிடைக்கும்தானே. அதுவும் ஒரு காரணம்தான். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.

    Reply : 0       0

    Brightfull Sunday, 18 March 2012 11:01 PM

    ரணிலுக்கு இப்போ இதுதான் தேவை ,,,,,,,,,
    அங்கே ஜெனீவாவில் ஒரு படி ஏறலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் ,
    அதற்கிடையில் இவருக்கு ஆட்சி மாற்றம் தேவையாம் ,, விமலின் இணைய கொமெடி போலவே இருக்கிறது இதுவும்.

    Reply : 0       0

    xlntgson Sunday, 18 March 2012 11:54 PM

    You have not so far outlined why your Cease Fire Agreement with LTTE failed, but all others know well that you gave up to Norwegians!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .