Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 19 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடக்கில் கலாசார உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது. அந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கா தெரிவித்தார்.
யாழ்.கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'யாழ்.கலைஞர்கள் தங்கள் கலைகளை வளப்படுத்துவதற்கு கலாசரா அமைச்சு உதவி செய்யத் தயாரக இருக்கிறது.
யாழில். கலாசார நிறுவனம் ஒன்றை நிறுவி வடக்கிற்கும் தெற்குக்கும் ஒரு உறவுப்பாலம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணியுள்ளோம். விரைவில் இந்த வேலைத்திட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தினுடாக செயற்படுத்தப்படவுள்ளது.
வடபகுதியில் வசிக்கும் கலைஞர்களின் கலை திறமைகள் சர்வதேச அரங்குகளில் வெளிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யாழ்.கலைஞர்கள் மிகவும் திறமை மிக்கவர்கள். இவர்களின் நாடகங்கள் அண்மையில் தேசிய மட்டத்தில் முதல் இடங்களைப் பெறறன.
யாழில்தான் சமூக கலாசரத்தை பிரதிபலிக்கின்ற கலையம்சங்கள் பொதிந்து கிடக்கின்றன. இவை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago