2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சைக்கிளைத் திருடிய நபருக்கு ஆறுமாத கடூழிய சிறைத் தண்டனை

Kogilavani   / 2012 மார்ச் 21 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வீட்டுக்குள் நுழைந்து சைக்கிளைத் திருடிய நபருக்கு ஆறுமாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா நேற்று  செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தார்.

கடந்த, 2010 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நாகநாதன் பிரசன்ன என்ற நபர் அராலி வீதி ஒட்டுமடப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டுமால சைக்கிளைத் திருடிய குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாரின் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்த மேற்படி நபர் குறித்த சைக்கிளை வீதியில் செலுத்தி சென்றுகொண்டிருந்த நிலையில் வீதிப் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று செவ்வாய்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் இவருக்கு ஆறுமாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .