2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட மகளிர் அமைப்பின் அமைதி ஊர்வலம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 22 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள்,  சிறுவர்கள்  மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களைக் கண்டித்து அமைதி ஊர்வலமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்த ஊர்வலம், யாழ். நல்லூர் ஆலய முன்றலிலிருந்து  ஆரம்பமாகி அங்கிருந்து கோயில் வீதியூடாக யாழ். மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.

'பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்காதே', 'சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை உடன் நிறுத்து', 'யாழில் பெண்களை நிம்மதியாகவும் சுயகௌரவத்துடனும் வாழவிடு'  போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அமைதி ஊர்வலத்தில் பெண்கள் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் யாழ். மாவட்ட செயலகத்தில் மகளிர் அமைப்பின்  பிரதிநிதிகள் மகஜரொன்றையும் கையளித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .