2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் இருவர் கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 22 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்கள கடற்றொழில் பரிசோதர்களினால் குருநகர் பகுதியில் கடல் அட்டையை வழி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் கொண்டு சென்றமை, கடல் அட்டைகளைத் தன்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்ற்சாசட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குருநகர் கடலுணவு ஏற்றுமதியாளர் இருவரும் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவ்விருவருக்கும் தலா 10,000 ஆள் பிணையில் செல்லுமாறும், பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளை விற்பனை செய்து மீன்பிடி வெகுமதி நிலையத்திற்கு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், மேற்படி இருவரின் கூலர் வாகனங்களை பிணைமுறியில் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு யாழ்.பிராந்திய நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு யாழ்.நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .