2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 மார்ச் 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக கல்வியை தொடரும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான உதவித்தொகை வடக்கு மாகாண சபையினால் இன்று வழங்கப்பட்டது.

இவ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம், கண்டி வீதியில் அமைந்துள்ள ஆளுனரின் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பல்கலைக்கழகத்தின் தெரிவுக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திசிறி கலந்து கொண்டு உதவித் தொகையினை மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், யுனிசெப்பின் பிரதிநிதிகள், வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .