2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                      (கவிசுகி)

யாழ். புல்லுக்குளப் பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிஹேர தெரிவித்துள்ளார்.

புல்லுக்குளப் பகுதியில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் இளைஞர்கள் இப்புல்லுக்குளப் பகுதிக்கு வந்து போதைப்பொருள் பாவிப்பது தொடர்பிலும் தமக்கு இரகசியத் தகவல் கிடைத்ததாகவும் இதனைத் தொடர்ந்து சிவில் உடையில் விசேட பொலிஸ் குழுவினர் இதனைக் கண்டுபிடிப்பதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள்  விற்பனைக் குழுவைச் சேர்ந்த இருவர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது  சிவில் உடையில் பொலிஸாரின் நடமாட்டத்தைக் கண்டு ஹெரோய்னை  குளத்திற்குள் வீசிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.  இந்த நிலையில் இவர்கள் இருவரையும் யாழ். பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு கைதுசெய்துள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி கூறினார்.

இவர்களிடமிருந்து சுமார் 8 இலட்சம்  ரூபா பெறுமதியான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிஹேர தெரிவித்துள்ளார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .