2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். சிறைச்சாலைக்குள் விற்பனைக்காக ஹெரோயின் கொண்டுசென்ற நபர் கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவருக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொடுப்பதற்காக யாழ்.சிறைசாலைக்கு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் சி.இந்திரகுமார் தெரிவித்தார்.

யாழ்.சிறைச்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விதம் கூறினார்.

கடந்த 23ஆம் திகதி மட்டுவில், சாவகச்சேரியைச் சேந்த குறித்த நபர் சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை நோக்கத்திற்காக கொண்டு வந்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டுவந்த சந்தேக நபரிடமிருந்து 12 சிறிய அளவிலாள பைக்கற்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். கைது செய்யப்பட்டவர் யாழ்.சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தற்போது 300 கைதிகள் மட்டும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

யாழ்.சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கைப்பணி பொருள்களை உற்பத்தி செய்யும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும். இந்தப் பயிற்சிக்காக மட்டக்களபபில் இருந்து விசேடமாக பயிற்சியாளர்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .