2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். அரச அதிபரின் பாதுகாப்பு வாகனம் விபத்து; அதிரடிப் படையினர் நால்வர் காயம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.அரச அதிபரின் பாதுகாப்புக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினரின் வாகனம் சங்குவேலிப் பகுதியில் விபத்தில் சிக்கியதில் நான்கு படையினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் யாழ்.சங்குவேலிப் பகுதியில் அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமாரின் வாகனத்திற்குப் பின்னால் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது வாகனத்தில் இருந்த அதிரடிப் படையினர் தூக்கி வீசப்பட்ட நிலையில் பாடுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .