2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு பிணை

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

பூநகரி, கிராஞ்சி, சிவபுரப் பகுதியில் கடந்த 02.10.2011 ஆண்டு துருவவலையால் மனைவியை குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.

திபோஸ்பாபு கலையரசி என்ற தனது மனைவியை துருவவலையால் குத்திக் கொலை செய்த கணவனான துரைசிங்கம் திபோஸ்பாபு எனற சந்தேக நபர் கிளிநொச்சிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது சந்தேக நபர் சார்பாக அவரது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு மன்றில் பிணை விண்ணப்பம் சமர்பித்திருந்தார்.

இதனை அடுத்து கொலைக்குற்றம் சாட்டப்பட்ட துரைசிங்கம் திபோஸ் பாபுவை 30,000 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் 1,50,000 ரூபா இரண்டு ஆள்பிணையில் செல்லுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .