2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் யானைமுகத்தையுடைய உருவக் கல் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                (கிரிசன்)


யாழ்ப்பாணம், இணுவில் காரைக்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியில் யானைமுகத்தைக்  கொண்ட உருவக் கல்லொன்று நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன்கோவிலிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலுள்ள தோட்டக் காணியிலேயே இவ் உருவக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தோட்டக் காணியில் மலசலகூடம் அமைப்பதற்காக 6 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட கிடங்கொன்று 4 முதல் 41/2 அடிவரை ஆழத்திற்கு  வெட்டப்பட்ட நிலையில், அக்கிடங்கில் யானைமுகமும் மற்றும் தும்பிக்கை போன்ற வடிவமும் கொண்ட உருவக் கல்  காணப்பட்டது.

இந்த உருவக் கல்  தொடர்பில் விடயங்கள் எதுவும் தெரியவரவில்லை. பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த உருவக் கல்லை பார்வையிடுவதற்காக வந்தவண்ணமுள்ளனர்.

காரைக்கால் சிவன்கோவில் வரலாற்றுக் காலத்திற்குட்பட்ட ஆலயமெனவும் அந்நியர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியிலிருந்த சிலை அன்றைய அந்நியர்களினால் எடுத்து தாக்கப்பட்டிருக்கலாமெனவும் ஒரு சில முதியர்வகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இப்பகுதியில் கற்பாறைகள்  காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இருப்பினும் சுமார் 8 முதல் 10 அடி ஆழத்திலேயே கற்பாறைகள் காணப்படும் சந்தர்ப்பமுள்ளதெனவும் அம்முதியவர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • ROBERT Thursday, 29 March 2012 01:51 AM

    எப்பிடி பார்த்தா யானை தெரியுது அத கொஞ்சம் கீறி காட்டுங்கோ பார்ப்பம் ???

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 01:44 PM

    சூனியம்தான் தெரியுது

    Reply : 0       0

    safna Thursday, 29 March 2012 02:02 PM

    ரோப்பர்ட் சொல்வது சரிதானே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .