2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடமராச்சி கிழக்கில் இந்திய மீனவர்களின் ஆதிக்கம் அதிகரிப்பு: எஸ்.கணேசமூர்த்தி

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். வடமராச்சி கிழக்கு பகுதியில் இந்திய மீனவர்களின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்வதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் அண்மையில் தான் இந்திய மீவர்களின் அத்துமீறிய வடகடல் மீன்பிடியை எதிர்த்து ஆர்ப்பட்டப் பேரணிகள் நடத்தியிருந்தனர்.

இருந்தும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி அதிகரித்துச் செல்வதினால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகவும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்.குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் உடனடியாக தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .