2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உடுவில் பிரதேச மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குவதை தடை செய்யுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வலி தெற்கு, உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் எதிர்காலத்தில் எந்தவொரு மதுபானச்சாலைகளுக்கும் அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என பொது மக்களும் பொது அமைப்புக்களும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உடுவில் பிரதேச செயலக ஒருங்கணைப்புக் குழுத்தலைவருமான முருகேசு சந்திரகுமாரிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

உடுவில் பிரதெச செயலக ஒருங்கிணைப்பக் குழுக்கூட்டம் அதன் குழுத் தலைவர் மு.சந்திரகுமார் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அரச திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,  வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

சுன்னாகம் நகரப் பகுதியில் பெருகியுள்ள மதுபானச்சாலைகளினால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களையும் அனுபவித்து வருகின்றார்கள். இதனால் மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

உரிய மதுபானச்சாலைகளின் உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மதுபானசாலைகளை நடத்து வேண்டும் என அறிவிப்பதுடன் இதனை நடைமுறைப்படுத்த மறுக்கும் மதுபானச்சாலைகளின் அனுமதிப்பத்திரத்தை தடை செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கையெடுப்பதாகவும் சந்திரகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .